மீண்டும் விரோதிகளாக இணையும் ஆர்யா, விஷால் – வெளியான மாஸ் அப்டேட்!!

0

திரைத்துறையில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஆர்யா மற்றும் விஷால் எனிமி என்ற படத்தில் கமிட்டாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த படத்தை பற்றிய புதிய தகவல் வைரலாகி வருகிறது.

விஷால், ஆர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் விஷால், ஆர்யா. அது மட்டுமல்ல இவர்கள் நெருங்கிய நண்பர்களும் கூட. எங்கு சென்றாலும் ஒரே மக்கள் தனது நடிப்பை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோ என வெளியிட்டும் வந்தனர்.

ஆர்யாவும், விஷாலும் இணைந்து பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ என்ற படத்தில் நடித்திருந்தனர். அந்த படமும் அவர்களுக்கு ஹிட் கொடுத்தது. அதன் பிறகு ஆர்யா மற்றும் விஷாலுக்கு எந்த படமும் ஹிட் கொடுக்கவில்லை. ஆர்யா தற்போது நடித்த டெடி படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

அதன் பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதுவும் தனது நெருங்கிய நண்பரான விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு எனிமி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here