தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பரவும் அபாயம் – இ-பாஸ் நடைமுறையால் ஆபத்து!!!

0
தமிழகத்தில் 'டெல்டா பிளஸ்' பரவும் அபாயம் - இ-பாஸ் நடைமுறையால் ஆபத்து!!!
தமிழகத்தில் 'டெல்டா பிளஸ்' பரவும் அபாயம் - இ-பாஸ் நடைமுறையால் ஆபத்து!!!

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இ – பாஸ் நடைமுறை:

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் இ – பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையால் அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் மாநிலம் அல்லது மாவட்டத்ததை விட்டு செல்ல முடியும். இந்தியா அளவில் டெல்டா பிளஸ் தொற்று எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மாநிலம் கேரளா. . தமிழகத்துக்குள் கேரள பயணியர் பல ஆயிரம் பேர், தினமும் எந்தவிதமான சான்றுகளும் இன்றி முறையான இ – பாஸ் இல்லாமலே வந்து செல்கின்றனர். கேரள எல்லையில் அமைந்துள்ள கோவை மாவட்டத்திற்குள்,

இ - பாஸ் நடைமுறை:
இ – பாஸ் நடைமுறை:

இவ்வாறு வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்றில் முதலிடத்தில் உள்ளது கோவை தான். இந்த நடைமுறையால் அங்கு மேலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கேரளாவில் இருந்து எந்தவித கட்டுப்பாடுமின்றி பயணியரை அனுமதித்தால், தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். வெளி மாநில பயணியருக்கு இ – பாஸ் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here