+2 பொதுத்தேர்வு முடிவுகள்.., மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் வெளியீடு.., முழு விவரம் இதோ!!!

0
+2 பொதுத்தேர்வு முடிவுகள்.., மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் வெளியீடு.., முழு விவரம் இதோ!!!
+2 பொதுத்தேர்வு முடிவுகள்.., மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் வெளியீடு.., முழு விவரம் இதோ!!!

12 வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதத்தை பார்க்கலாம்.

தேர்ச்சி விவரம்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +2 பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். இந்த தேர்வை 8,03,385 மாணவர்கள் எழுதிய நிலையில் அதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியானதில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் திருப்பூர், மூன்றாம் இடத்தில் பெரம்பலூர், நான்காம் இடத்தில் கோவை, ஐந்தாம் இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் இடம்பெற்றுள்ளது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

அதே போன்று அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அதை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

  • விருதுநகர் 97.85
  • திருப்பூர் 97.79
  • பெரம்பலூர் 97.59
  • கோவை 97.57
  • தூத்துக்குடி 97.36
  • சிவகங்கை 97.26
  • கன்னியாகுமரி 97.05
  • ஈரோடு 96.98
  • நாமக்கல் 96.94
  • அரியலூர் 96.88
  • திருநெல்வேலி 96.61
  • ராமநாதபுரம் 96.3
  • திருச்சி 96.02
  • தென்காசி 95.96
  • மதுரை 95.84
  • தஞ்சாவூர் 95.18
  • கரூர் 94.31
  • சேலம் 94.22
  • சென்னை 94.14
  • நீலகிரி 93.85
  • திண்டுக்கல் 93.77
  • புதுச்சேரி 93.45
  • தேனி 93.17
  • புதுக்கோட்டை 92.81
  • தருமபுரி 92.72
  • செங்கல்பட்டு 92.52
  • திருவள்ளூர் 92.47
  • கடலூர் 92.04
  • திருவாரூர் 91.46
  • திருப்பத்தூர் 91.13
  • கள்ளக்குறிச்சி 91.06
  • காஞ்சிபுரம் 90.82
  • நாகப்பட்டினம் 90.68
  • விழுப்புரம் 90.66
  • மயிலாடுதுறை 90.15
  • திருவண்ணாமலை 89.8
  • கிருஷ்ணகிரி 89.69
  • வேலூர் 89.2
  • காரைக்கால் 88.57
  • ராணிப்பேட்டை 87.3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here