சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு தகுதி இருக்கா?? சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்!!

0
சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு தகுதி இருக்கா?? சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்!!
சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு தகுதி இருக்கா?? சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்!!

சச்சினின் நூறாவது சதத்தை எதிர்நோக்கி உள்ள விராட் கோலி குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில், இந்திய அணி எதிர்கொண்ட 3 ஒருநாள் போட்டிகளில், விராட் கோலி 2 சதங்களை அடித்து அசத்தி இருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் மூலம், விராட் கோலி சச்சினின் நூறாவது சதத்தை விரைவில் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி 70 சதங்களை விரைவாக கடந்த நிலையில், 71 வது சதத்திற்கு கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆனது. இவர், கடந்த ஆசிய கோப்பையில் சதம் அடித்த பிறகு, டிசம்பர் மற்றும் ஜனவரி மாத தொடக்கத்திலேயே 3 சதங்களை அடித்து தனது 74 வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

விரைவில் டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் ரிஷப் பண்ட்…, வெளியான அப்டேட்!!

இந்நிலையில், விராட் கோலியின் நூறாவது சதத்தை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, விராட் கோலி தற்போது பழைய பார்முக்கு திரும்பி விட்டார். இவரது, சராசரியை பார்க்கும் போது, சச்சின் தனது 40+ வயதில் அடைந்த 100 வது சதத்தை, விரைவில் ரன் மிஷினான விராட் கோலி அடித்து விடுவார் என கூறியுள்ளார். மேலும், கிரிக்கெட்டை நேசிக்கும், இவருக்கு ஓய்வு என்பது அதிக தேவைப்படாது. இதனால், நீண்ட காலம் அணியில் இருப்பார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here