T20 போட்டிகளில் விராட் கோஹ்லி, ரோஹித்தை கழற்றி விட நினைக்கும் பிசிசிஐ…, இதற்கு மட்டும் பயன்படுத்த திட்டமா??

0
T20 போட்டிகளில் விராட் கோஹ்லி, ரோஹித்தை கழற்றி விட நினைக்கும் பிசிசிஐ...,
T20 போட்டிகளில் விராட் கோஹ்லி, ரோஹித்தை கழற்றி விட நினைக்கும் பிசிசிஐ...,

டி20 போட்டிகளில் ரோஹித், விராட் கோஹ்லி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,

பிசிசிஐ:

டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல தவறியதால், பிசிசிஐ பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது. இதில், சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழுவை நீக்கியதை தொடர்ந்து, பிசிசிஐ இந்திய அணியின் மனநல பயிற்சியாளரான பேடி அப்டனாது ஒப்பந்தத்தை நீட்டிக்க முன் வராமல் இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், பிசிசிஐ டி20 போட்டிகளுக்காக ஹர்திக் பாண்டியாவை தயார்ப்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில், சீனியர் வீரர்களான, ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களுக்கு டி20 போட்டிகளில் இனி வாய்ப்பு கொடுக்க போவது அரிது தான் என பிசிசிஐ வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி வருகின்றன.

155கிமீட்டாரா 135 கிமீட்டாரா?? எந்த வேகம் வெல்லும்…, பதில் அளித்த அர்ஷ்தீப் சிங்!!

அதாவது, அடுத்த வருடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை தொடர்ந்து வர இருப்பதால், சீனியர் வீரர்களை ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மட்டும் பயன்படுத்தும் முயற்சியில் பிசிசிஐ இறங்கி உள்ளது. பிசிசிஐயானது, புதிய தேர்வுக் குழுவை தேர்வு செய்தவுடன் இது குறித்து முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here