குரங்கு அம்மை வைரஸ் குறித்து புதிய தகவல்.,பெயருடன் உலக சுகாதார அமைப்பு கொடுத்த அறிவிப்பு!!

0
குரங்கு அம்மை வைரஸ் குறித்து புதிய தகவல்.,பெயருடன் உலக சுகாதார அமைப்பு கொடுத்த அறிவிப்பு!!
குரங்கு அம்மை வைரஸ் குறித்து புதிய தகவல்.,பெயருடன் உலக சுகாதார அமைப்பு கொடுத்த அறிவிப்பு!!

1958ல் குரங்குகளுக்கு ஏற்பட்ட வைரஸை பரிசோதனை செய்த டென்மார்க் ஆராய்ச்சி மையங்கள் அந்த நோய்க்கு Monkey box (குரங்கு அம்மை) என பெயரிட்டனர். பின்பு இந்த நோய் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மனிதர்களுக்கு பரவியது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை சோதித்த போது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் மனிதர்களிடையே அதிகம் பரவியதாக அறிவித்தனர். ஆனால்,உலகமெல்லாம் இப்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

காய்ச்சல், தலைவலி, தோல் கொதிப்பு (பெரியம்மை) போன்ற பிரச்சனைகள் தான் இந்த நோயின் அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது 110 நாடுகளில் 81,107 பேருக்கு தொற்று மற்றும் 55 பேர் இந்த நோயால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 97 சதவீதம் 34 வயதை அடைந்த ஆண்களாகவும், 85 சதவீத ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளனர். இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா (29,001), பிரேசில் (9,905), ஸ்பெயின் (7,405) முதலிடத்தில் உள்ளனர்.

ஒரு வயதில் கடத்தப்பட்ட பெண் குழந்தை.., 57 வருடங்களுக்கு மீட்பு.., கண்கலங்க வைத்த சம்பவம்!!

ஆரம்ப காலத்தில் குரங்களுக்கு ஏற்பட்ட இந்த நோயால் இப்போது மனிதர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த நோயை Monkey box (குரங்கு அம்மை) என கூறாமல் பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் இந்த நோய்க்கு இப்போது Mpox” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக World Health Organisation அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here