155கிமீட்டாரா 135 கிமீட்டாரா?? எந்த வேகம் வெல்லும்…, பதில் அளித்த அர்ஷ்தீப் சிங்!!

0
155கிமீட்டாரா 135 கிமீட்டாரா?? எந்த வேகம் வெல்லும்..., பதில் அளித்த அர்ஷ்தீப் சிங்!!
155கிமீட்டாரா 135 கிமீட்டாரா?? எந்த வேகம் வெல்லும்..., பதில் அளித்த அர்ஷ்தீப் சிங்!!

ஒருநாள் தொடரில் அறிமுகமான அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்குடன் சேர்ந்து பந்து வீசியது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அர்ஷ்தீப் சிங்:

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர்களை விளையாடி வருகிறது. இந்த தொடரில், இளம் வீரர்களை கொண்டே இந்திய அணி களமிறங்கி உள்ளது. இதில், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் இவர்களுக்கு ஒருநாள் தொடருக்கான அறிமுக போட்டி ஆகும். அர்ஷ்தீப் சிங் டி20 போட்டிகளில் அதிவேக பந்துவீச்சால் இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தி கொண்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் இவருக்கு ஒருநாள் தொடரின் அறிமுகப் போட்டி அதிக அளவில் சிறப்பாக அமையவில்லை. ஆனால், உம்ரான் மாலிக், நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில், 5 ஓவரில் 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் பேட்டி ஒன்றில் இந்த இரு அறிமுக கூட்டணி குறித்து, கூறியுள்ளார்.

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித் தொகை…, முழு விவரம் உள்ளே!!

இவர் கூறியதாவது, உம்ரான் மாலிக்குடன் இணைந்து பந்து வீசுவது, எனக்கும் நல்ல பலன் தான் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, 155 கி மீ வேகத்தில் வரும் உம்ரான் மாலிக் பந்தை எதிரணி பேட்ஸ்மேன் எதிர்கொள்ளும் போது, 135 கிமீ வேகத்தில் வரும் என் பந்தை கண்டு பேட்ஸ்மேன் ஏமாற்றத்தை அடைவார் என தெரிவித்துள்ளார். இந்த ஏமாற்றத்தால், பேட்ஸ்மேன் குழப்பமடைந்து, தடுமாறவும் வாய்ப்பு உள்ளது. இதனால், எங்கள் கூட்டணி தொடரும் என அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here