கிங் கோலிக்கு ஜாக்பாட்.., 98 ரன்கள் எடுத்தால் போதும் .., புதிய சாதனை கன்பார்ம்!!

0
கிங் கோலிக்கு ஜாக்பாட்.., 98 ரன்கள் எடுத்தால் போதும் .., புதிய சாதனை கன்பார்ம்!!
கிங் கோலிக்கு ஜாக்பாட்.., 98 ரன்கள் எடுத்தால் போதும் .., புதிய சாதனை கன்பார்ம்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் விராட் கோலி 98 ரன்கள் மட்டும் எடுத்தால் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம் வருவார்.

IND VS AUS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 20 ஆம் தேதி பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகின் NO 1 அணியை வீழ்த்துவதற்கு இந்தியா தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் மூலம் விராட் கோலி இரண்டு பெரும் சாதனைகளை புரிய அதிக வாய்ப்புள்ளது. அதாவது T20 கிரிக்கெட் தொடரில் 11000 ரன்களை எட்டுவதற்கு விராட் கோலி இன்னும் 98 ரன்கள் தேவை படுகிறது.

இதனால் இந்த தொடரில் விராட் 98 ரன்கள் குவித்து விட்டால் T20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கலாம். மேலும் கோலி இதுவரை 349, T20 போட்டிகளில் விளையாடி 10902 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை தொடர்ந்து விராட் மற்றொரு சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 2,4002 ரன்களுடன் தற்போது 7 வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விராட் 207 ரன்கள் எடுத்தால், ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து 6-வது இடத்தை தனதாக்கி கொள்ளலாம். இந்த இரு தொடர்களின் மூலம் விராட் கோலி பல சாதனைகளை முறியடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here