அடடா.., என்ன ஒரு ஜோடி பொருத்தம்.., சூர்யா-ஜோதிகாவிற்கே டப் கொடுக்கும் அமீர்-பாவனி ஜோடி!!

0
சூர்யா-ஜோதிகாவிற்கே டப் கொடுக்கும் அமீர்-பாவனி ஜோடி!!

அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொண்டதும் அமீர் சொர்க்கத்தில் மிதப்பது போல சுற்றி கொண்டிருக்கிறார். இந்நிலையில், இருவரின் ரொமான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைப்பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாவனி – அமீர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாகவே பாவனி மற்றும் அமீர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். மேலும், தனது முதல் சந்திப்பிலேயே பாவனி மீது அமீருக்கு காதல் வந்துவிட்டது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் தனியே அவ்வப்போது பேசிக் கொண்டிருப்பதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தான் வதந்திகள் பரவி கொண்டிருந்தன.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட பாவனி மற்றும் அமீர் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தான் இந்த வதந்திகள் பரவி வந்தன. ஆனால், பாவனி காதலை ஏற்க மறுத்துவிட்டார்.அதாவது இவரும் தன்னை விட்டுவிட்டு சென்று விடுவாரோ என்கிற பயத்தில் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், அமீர் பாவனி மீது உயிரையே வைத்திருப்பதால் இறுதியில் பாவனி அமீரின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், தன்னுடைய காதலையும் பாவனி ஏற்றுக் கொண்டு விட்டார் என அமீர் பயங்கர குஷியில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார். இதனிடையே அமீர் மற்றும் பாவனியின் ரொமான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here