தோனி பாணியில் விராட் கோஹ்லி…, புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்!!

0

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி காட்டி அரை சதம் கடந்த இந்தியாவின் விராட் கோஹ்லியை தோனியுடன் ஒப்பிட்டு கபில் தேவ் பாராட்டியுள்ளார்.

கபில் தேவ்:

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், சேஸிங் செய்த இந்திய அணியின் முன் வரிசை வீரர்கள் விரைவில் வெளியேற விராட் கோஹ்லியும், ஹர்திக் பாண்டியாவும் இந்தியா வெற்றி பெறுவதற்கு வழி வகுத்தனர்.

இதில், விராட் கோஹ்லி 53 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 82 ரன்களை அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இவரது, அதிரடியான பேட்டிங்கை பார்த்த பல முன்னாள் வீரர்கள் இவரை தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். இந்த வகையில், இந்தியாவின் முன்னாள் வெற்றி கேப்டன் கபில் தேவ், விராட் கோஹ்லியை தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டி உள்ளார்.

அதில், இந்திய அணி 2011ம் ஆண்டு உலக கோப்பை வென்றதற்கான, தோனி அடித்த வின்னிங் சிக்ஸரை ரசிகர்கள் அனைவரும் இன்றளவும் பார்த்து ரசித்து வருகிறார்கள். அந்த சிக்ஸரை எளிதில் யாராலும் மறக்க முடியாது. இது போலவே, பாகிஸ்தானின் ஹரிஸ் ரவூப் வீசிய பந்தில் விராட் கோஹ்லி அடித்த அற்புதமான சிக்ஸரும் அடிக்கடி பார்க்க தூண்டுவதாக கபில் தேவ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here