சர்ச்சையில்  சிக்கிய பாகிஸ்தான் வீரர்.., விராட்  ரசிகர்கள்  செய்த  காரியம் – ஓ இதான் பதிலுக்கு பதிலா!!

0
சர்ச்சையில்  சிக்கிய பாகிஸ்தான் வீரர்.., விராட்  ரசிகர்கள்  செய்த  காரியம் - ஓ இதான் பதிலுக்கு பதிலா!!
சர்ச்சையில்  சிக்கிய பாகிஸ்தான் வீரர்.., விராட்  ரசிகர்கள்  செய்த  காரியம் - ஓ இதான் பதிலுக்கு பதிலா!!

ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் கேப்டனுக்கு,  விராட் கோலியின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி VS பாபர் அசாம்!!

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால் இந்த இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை சமாளிக்க முடியாமல் தோல்வியடைந்து ஆசிய கோப்பையை தவறவிட்டது. இந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டது தான் காரணம் என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் அணியின் கேப்டனான பாபர் அசாம் இறுதி போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இவர் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் ஆட்டம் இழந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது லெக் சைட்டில் போடப்பட்ட பந்தை, ஃபீல்டர் உள்ளார் என்பதை தெரிந்தே ஆடி அவுட்டானார். இவர் இது போன்று செய்ததற்கு பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் விராட் கோலியின் ரசிகர்கள் பாபர் அஸ்ஸாமுக்கு ஆதரவாக தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். விராட் கோலியின் ரசிகர்கள் பாபருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஒரு காரணமும் உள்ளது. அதாவது விராட் கோலி மோசமான பார்மில் விளையாடிய போது “இதுவும் கடந்து போகும்” தைரியமாக இருங்கள், அடுத்த போட்டியில் பார்க்கலாம் என விராட் கோலிக்கு ஆதரவாக பாபர் ட்விட்டரில் பதிவிட்டார்.

இவரது வாக்கு இந்த ஆசிய கோப்பை தொடரில் பலித்து விட்டது என்றே சொல்லலாம். அதாவது விராட் கோலி 3 வருடங்கள் கழித்து நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரில் சதமடித்து அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். ஆனால் ஆறுதலாக இருந்த பாபர் அசாமுக்கு கோலியின் நிலையை விட தற்போது மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு விராட்டின் ரசிகர்கள் கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரராக விளையாடி வந்த அவருக்கா, இந்த நிலைமை என ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here