உங்க ரேஷன் கார்டு தொலைச்சுடுச்சா.., 5 நிமிசத்துல வேலை முடிஞ்சுடும்.., முழுவிபரம் உள்ளே!!

0

நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் உதவுவதற்காக செயல்பாட்டில் உள்ள ரேஷன் கார்டு, தொலைந்து விட்டால், புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்வது தற்போது எளிமையாகி விட்டது.

எளிய விதிமுறைகள்:

ரேஷன் கார்டு என்பது மிக மிக முக்கியமான ஆவணம் ஆகும். மேலும் மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம். ரேஷன் கார்டு மூலம் மாதாந்திரம் உணவுப் பொருட்களை மலிவு விலையிலும், இலவசமாகவும் பெற்றுக்கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.. ரத்து செய்யப்படும் கார்டுகள் – இது தான் காரணமா?

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டை தவறுதலாக தொலைத்து விட்டால், பதற்றம் வேண்டாம் மறுபடியும் புதிய ரேஷன் அட்டையை ஆன்லைன் மூலமாகவும், ஆஃப்லைன் முறை மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். இதன் அடிப்படையில், ஆஃப்லைன் முறையில் ரேஷன் அட்டை நகலை பெற, முதலில் மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு குடும்ப உறுப்பினர்களின் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதனுடன் ரேஷன் கார்டு எண், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டை, குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இறுதியாக நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின் அத்துடன் அபராதக் கட்டணத்தின் இரண்டு ரசீதுகளையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் முறை :

  • நீங்கள் முதலில் https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும். உள்ளே சென்றதும் உங்கள் பயனாளர் IDஐ பதிவிட வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்து சுயவிவர பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.
  • இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் ஓப்பன் ஆகும்.
  • அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு அந்த படிவத்தை PDF வடிவில் சேமித்து அதை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • இந்த பிடிஎப் படிவத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here