தனது ஆசையை இந்த விதமாக தீர்த்து கொண்ட நடிகை நயன்தாரா.., லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா??

0
நீச்சல் உடையில் நயன்தாரா இருந்தால் அது கவர்ச்சியாக தெரியாது - பிரபல கவர்ச்சி நடிகை பேட்டி!!!

தனியார் நகைக்கடையின் விளம்பரத்திற்காக நடிகை நயன்தாரா மகாராணி போல அட்டகாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா:

திரையுலகில் அன்று முதல் இன்று வரை நடிகைகள் பட்டியலில் முதலாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது. அதில் ரசிகர்கள் ஆர்வமாக வெயிட் பண்ணும் திரைப்படம் ஜவான். இப்படத்தை அட்லீ இயக்குவது குறிப்பிடத்தக்கது. இந்த படு பிசியில் இருக்கும் நடிகை நயன்தாரா தனது ஆசை கணவர் விக்னேஷ் சிவனுடன் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் தங்களது இரண்டாவது ஹனிமூனை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.


மேலும் முன்னணி நட்சத்திரங்கள் கடை விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்திற்காக சோழ நாட்டின் இளவரசி போன்று அம்சமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த ஐடியாவை கொடுத்தது நடிகை நயன்தாரா தான் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்திற்கு உலகில் உள்ள பல கோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வில்லை என்றாலும் அந்த ஆசையை இந்த விளம்பரத்தின் மூலம் தீர்த்து கொண்டார் நடிகை நயன்தாரா. இந்த விளம்பரம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இந்த மாத கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விளம்பரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here