தமிழகத்தில் உருவெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.., மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் அவதிக்குள்ளான நோயாளிகள்!!

0
தமிழகத்தில் உருவெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.., மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் அவதிக்குள்ளான நோயாளிகள்!!
தமிழகத்தில் உருவெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.., மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் அவதிக்குள்ளான நோயாளிகள்!!

உலகெங்கும் காலநிலை மாற்றத்தால் பல்வேறு நோய் தொற்றுகள் பரவிய வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்தாண்டு வழக்கத்தை விட பனிப்பொழிவு இருப்பதால் நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இந்த வைரஸால் காய்ச்சல், சளி, தொண்டை புகைச்சலையும் ஏற்படுத்துகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் டோக்கன் பெற்று வரிசையில் அணிவகுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு நபர்கள் சிகிச்சை பெறுவதாக படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது.

குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர்!!! இந்திய ராணுவத்தின் வேற லெவல் சாகச நிகழ்ச்சி!!!

இதுகுறித்து அரசு மருத்துவர் கூறுகையில் “நோயாளிகளின் உறவினர்கள் அதிகமாக வருவதால் அரசு மருத்துவமனை கூட்டமாக காணப்படுகிறது. மேலும் படுக்கையில் உறவினர்கள் படுத்திருப்பதை படம் எடுத்து வதந்தியை கிளப்பி வருகின்றனர். ஒருவேளை நோயாளிகள் அதிகமாகும் பட்சத்தில் கொரோனா வார்டும் தயாராக உள்ளது.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here