ஹாலிவுட்ல படம் பண்ணலாமா? Help வேணும்னா என்கிட்ட கேளுங்க.., ராஜமவுலிக்கு பூஸ்ட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்!

0
ஹாலிவுட்ல படம் பண்ணலாமா? Help வேணும்னா என்கிட்ட கேளுங்க.., ராஜமவுலிக்கு பூஸ்ட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்!
ஹாலிவுட்ல படம் பண்ணலாமா? Help வேணும்னா என்கிட்ட கேளுங்க.., ராஜமவுலிக்கு பூஸ்ட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான வரலாற்று கதைகளுக்கு நிகராக படங்களை எடுத்து சாதனை படைத்தவர் தான் இயக்குனர் ராஜமவுலி. அந்த வகையில் இவர் இயக்கிய மாவீரன், நான் ஈ, பாகுபலி பாகம் 1, பாகம் 2 போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக சாதனைகளை படைத்தது. மேலும் சமீபத்தில் இவர் இயக்கிய RRR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதனால் அடுத்த இயக்க இருக்கும் படத்திற்காக ரசிகர்கள் தற்போது இருந்தே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில் டைட்டானிக், அவதார், அவதார் 2 படங்களை இயக்கிய ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலியை சமீபத்தில் நடைபெற்ற கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது விழாவில் சந்தித்து புகழாரம் பாடியுள்ள வீடியோவை RRR படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பாக்கியலட்சுமி ஜெனியின் Ex-காதலனுக்கு ஏற்பட்ட சோதனை.., வேண்டிக்கோங்க ப்ளீஸ்.., உருக்கமான பதிவு!!

அதாவது எஸ் எஸ் ராஜமெளலி சமீபத்தில் இயக்கிய RRR படத்தை 2 முறை பார்த்ததாக ஜேம்ஸ் கேமரூனின் மனைவியும் இயக்குநருமான சூசி அமீஸ் கேமரூன் ராஜமெளலியிடம் சொல்ல அவருக்கு உடம்பு மெய் சிலிர்த்து விட்டது. அதுமட்டுமின்றி, ராஜமெளலி தற்போது டாப் ஆஃப் தி வேர்ல்ட்ல இருக்காரு என்றும் இந்திய நாட்டின் மக்களின் சுதந்திரம், உணர்ச்சிகளை படமாக கொடுத்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் உங்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம் ராஜமெளலிக்கு எக்ஸ்ட்ரா போனஸ் தான் என படத்தையும் இயக்குநர் ராஜமெளலியின் உழைப்பையும் வெகுவாக பாராட்டி உள்ளார். அதுமட்டுமின்றி ஹாலிவுட்ல படம் பண்ணனும்னா சொல்லுங்க நான் Help பண்ணுகிறேன் என்று கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here