விஜய் டிவி பிக் பாஸ் 4ல் கலந்து கொள்ளும் சினேகா, லைலா..? எப்போ ஆரம்பிக்குது தெரியுமா..?

0
நடிகை ஸ்நேகா வீட்டில் நடந்த முக்கிய குடும்ப விழா - நேரில் வந்து கலந்து கொண்ட நடிகர் தனுஷ்!!

பிக் பாஸ் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாகும். பிக் பாஸ் சீசன் 1 மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் விஜய் டிவியின் TRP பலமடங்கானது. அடுத்ததடுத்த சீசன்காக மக்கள் காத்திருந்தனர். சீசன் 2 அந்த அளவுக்கு பிரபாலமாகவில்லை என்றே கூறலாம். ஆனால் சீசன் 3, கடந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு புகழ் பெற்றது. அந்த வகையில் தற்போது சீசன் 4 தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பலர் பிரபலமடைந்து உள்ளனர். அந்த வகையில் சீசன் 1 ஓவியாவிற்கு ரசிகர்கள் ஓவியா ARMY ஆரம்பித்து அவர்களின் அன்பை வெளிப்படுத்தினர். அதே போல் கடந்த சீசன் 3 இல் லாஸ்லியாவும் புகழ் பெற்றார். தற்போது லாஸ்லியா பல விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். லாஸ்லியா மட்டுமல்ல கவின், முகின் ராவ், சாண்டி மாஸ்டர், ஷெரின் போன்றவர்களும் பிரபலமானார்கள்.

அடுத்த சீசன்??

அடுத்த சீசன் 4, ஜூன் 25 முதல் ஆரம்பமாகி செப்டம்பர் 30 முடிவடைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சீசன் 106 நாட்கள் நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். எனவே மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அடுத்து இதில் யார் கலந்துகொள்ள போகின்றனர் என்பதும் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் லைலா கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏனெனில் அவர் போன சீசனிலேயே கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் பிஸியாக இருந்தலால் கலந்துகொள்ள முடியவில்லை என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். அதனால் இந்த சீசனில் கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

அதைத் தொடர்ந்து சினேகாவும் கலந்து கொள்வதாக செய்திகள் வெளிவருகின்றன. பிறகு கண்டிப்பாக குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் அல்லது புகழ், பாலா இவர்களில் யாராவது ஒருவர் கலந்து கொள்வர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here