தாத்தாவான கோபி.,, வீட்டுக்கு போய் வெறுப்பேத்தும் ராமமூர்த்தி..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

0
தாத்தாவான கோபி.,, வீட்டுக்கு போய் வெறுப்பேத்தும் ராமமூர்த்தி..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!
தாத்தாவான கோபி.,, வீட்டுக்கு போய் வெறுப்பேத்தும் ராமமூர்த்தி..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், தொடர்ந்து பிரச்சனைகள் மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில் பாக்கியா குடும்பத்தில் தற்போது ஒரு நல்ல விஷயம் நடந்து உள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில், ஜெனி தொடர்ந்து வாமிட் எடுத்துக் கொண்டு இருக்க செழியன் வந்து என்னாச்சு, நேத்து நைட்டு சாப்பிட்டது ஏதும் சேரலையா? என்று கேட்கிறார். அதற்கு ஜெனி இல்லை 3 நாட்களாக வாமிட் வருகிறது என்று கூறுகிறார். இதையடுத்து ஜெனி கிச்சனுக்கு செல்ல அப்போது ஈஸ்வரி, பாக்கியா ஜெனியை பார்த்து ஏன் டல்லா இருக்க என கேட்க, காலையில் இருந்து வாமிட் எடுத்தேன் என கூறுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதற்கு ஈஸ்வரி நாள் தள்ளி போயிருக்கா என்று கேட்கிறார். அதற்கு ஜெனி ஆமா பாட்டி என்று சொல்ல அப்ப நல்ல விஷயமாதான் இருக்கும் என ஈஸ்வரி சொல்கிறார். இதையடுத்து ஹாஸ்பிட்டலுக்கு செக்கப்புக்கு போக அங்கு டாக்டர் ஜெனி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதை கன்பார்ம் செய்துள்ளார். இதை கேட்டு பாக்கியா குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே சந்தோசம். இதையடுத்து ராமமூர்த்தி ஸ்வீட் எடுத்து கொண்டு கோபி வீட்டுக்கு சென்று, நான் கொல்லு தாத்தாவாக போறேன் நீ தாத்தாவாக போற தாத்தா தாத்தா என கோபியை வெறுப்பேற்றுகிறார்.

செழியன் அப்பா ஆனதை நினைத்து கோபி சந்தோசப்படுகிறார். இருப்பினும் ராமமூர்த்தி தன்னை தாத்தா தாத்தா என்று சொல்வதை கேட்டு கோபி பயங்கரமாக கோபப்படுகிறார். என்ன பார்த்தா தாத்தா மாதிரியா? இருக்கு என ராதிகாவிடம் புலம்புகிறார். மறுபக்கம் செழியனுக்காக கோபி வந்து வீட்டு வாசலில் காத்துகொண்டு இருந்தார், அப்போது செழியனை பார்த்ததும் சந்தோசத்தில் கட்டிப்பிடித்து வாழ்த்து கூறுகிறார். இருப்பினும் செழியன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பிறகு ஜெனியிடம் என்னுடைய வாழ்த்தை சொல்லிவிடு என்று கூறி கோபி கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here