புரோ கபடி 2022: பிங்க் பாந்தர்ஸ் & பாட்னா பைரேட்ஸ் அசத்தல் வெற்றி…, புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!

0
புரோ கபடி 2022: பிங்க் பாந்தர்ஸ் & பாட்னா பைரேட்ஸ் அசத்தல் வெற்றி..., புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!
புரோ கபடி 2022: பிங்க் பாந்தர்ஸ் & பாட்னா பைரேட்ஸ் அசத்தல் வெற்றி..., புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!

புரோ கபடி லீக்கில், பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ், யு மும்பா மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் எடுத்த அசத்தலான வெற்றியால் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

புரோ கபடி:

புனேவில் இந்தியன் புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று யு மும்பா அணியை எதிர்த்து பிங்க் பாந்தர்ஸ் அணி மோதியது. இதில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பும் கடைசி வரை நீடித்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இறுதியில், 39-42 என்ற புள்ளி கணக்கில் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பாவை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது. இதில், பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஸ்வால் அதிகபட்சமாக 10 ரைட் சென்று 15 புள்ளிகளை எடுத்து அசத்தியிருந்தார். இது போன்ற மற்றொரு ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்த்து ஹரியானா ஸ்டீலர்ஸ் போட்டியிட்டது. இந்த போட்டியில், பாட்னா பைரேட்ஸின் சச்சின் அதிரடியாக செயல்பட்டு 13 புள்ளிகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதனால், பாட்னா பைரேட்ஸ் அணி 41-32 புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது. இந்த இரு போட்டிகளின் முடிவில், பிங்க் பாந்தர்ஸ் 37 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், பாட்னா பைரேட்ஸ் 33 புள்ளிகளுடன் 6 வது இடத்தையும் பிடித்தன. நேற்று வரை 3 வது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் பிங்க் பாந்தர்ஸின் வெற்றியால் 33 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here