நடிகர் விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட் – அடுத்தடுத்து குவியும் கௌரவம்! அரசு கொடுத்த சூப்பர் அங்கீகாரம்!!

0
நடிகர் விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்தடுத்து குவியும் கௌரவம்! அரசு கொடுத்த சூப்பர் அங்கீகாரம்!!
நடிகர் விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்தடுத்து குவியும் கௌரவம்! அரசு கொடுத்த சூப்பர் அங்கீகாரம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமுக்கு, அரசின் சார்பாக முக்கிய அங்கீகாரம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்:

தமிழ் சினிமாவில் சியான் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, இயல்பாக நடிப்பதில் நடிகர் இவர் கை தேர்ந்தவர். அந்த வகையில், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த, பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தில், ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்தியிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. இதையடுத்து, இவர் மீண்டும் ஒரு வரலாற்று கதையில் நடிக்க உள்ளதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விக்ரமுக்கு, அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கவுரவ படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்த அங்கீகாரம் கமல், ராதா, பார்த்திபன், மீனா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பிரபலங்களின் வரிசையில் நடிகர் விக்ரமும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தால் அவரது ரசிகர்கள் தீவிர கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here