உலக நாயகனின் தந்தையை பார்த்துள்ளீர்களா.., யாரும் பார்க்காத அரிய வகை புகைப்படம் உள்ளே!!

0

உலகநாயகன் கமல்ஹாசன் தந்தையை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன்:

திரையுலகில் மூத்த கலைஞராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் அமோக வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. தற்போது இயக்குனர் சங்கர் படைப்பில் இந்தியன் 2 படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார்.

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் இந்த திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமலின் தந்தையை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. உலக நாயகனின் தந்தை பெயர் ஸ்ரீனிவாசன் மற்றும் தாயின் பெயர் ராஜலட்சுமி. ஸ்ரீனிவாசன் தனது குழந்தைகளை நன்றாக படிக்க எண்ணினார்.

ஆனால் கமல் நடிப்பில் ஆர்வமிக்கவராக விளங்கியதால், அவ்வப்போது கமலை நினைத்து வருத்தப்பட்டார். இருப்பினும் கமல் மீது அவர் வைத்த அளவு கடந்த அன்பு எப்போதும் குறைந்ததில்லை. அதே போல் கமலும் தனது தந்தை மீது அலாதி பாசம் வைத்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2019ம் ஆண்டு கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தையின் உருவ சிலையை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here