தளபதி 66 படத்தின் கதை இது தான் – தயாரிப்பாளரின் அப்டேட் கேட்டு நெகிழ்ந்து போன   ரசிகர்கள்!!

0
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!

நடிகர் விஜய் நடிக்க உள்ள, தளபதி 66 படத்தின் கதை பற்றி முக்கிய அப்டேட் ஒன்றை, படத்தின் தயாரிப்பாளர் டில் ராஜு தெரிவித்துள்ளார்.

 தளபதி 66 :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும், நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற கோடை விடுமுறையில், திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்  தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் விஜய் முதன்முறையாக இந்த படத்தின் வாயிலாக டோலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்த நிலையில், இந்தப் படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை, இதன் தயாரிப்பாளர் டில் ராஜு தெரிவித்துள்ளார். அதாவது இந்த படம் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக உள்ளிட்ட படங்களின் கதையம்சம் கொண்டதாக இருக்கும்  என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, நடிகர் விஜய்க்கு சிறந்த காதல் கதையம்சம் கொண்ட படமாக தளபதி 66 இருக்குமென நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here