உலகம் முழுவதும் சட்டென சரிந்த கொரோனா பாதிப்பு – நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!!

0

உலகம் முழுவதும் படு வேகமாக பரவி வந்த கொரோனா பாதிப்பு தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

குறைந்து வரும் பாதிப்பு :

சீனாவின் வூஹான் நகரில், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா, தற்போது 221 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமைக்ரானாக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவினாலும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இங்கிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா,  பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவில், 3,12,314 நபர்களுக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிரிட்டனில், தினசரி பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது. பிரான்சில் 3 லட்சத்தை தாண்டிய பாதிப்பால்,இதுவரை 1,63,90,818 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும், 35,19,14,175 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 6,66,16,687 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 27,96,83,155 நபர்கள் குணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும், 56,24,333 நபர்கள் இறந்துள்ளனர். உலக நாடுகளில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here