2021ல் பிரபலமான இந்தியப் படங்கள்: முதலிடத்தில் மாஸ்டர் – கர்ணனுக்கு 6ம் இடம்!!!!

0

பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது மேலும் தனுஷ் நடித்த கர்ணன் படம் 6ம் இடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தில் மாஸ்டர்:

பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான IMBD வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும். ஆனால் தற்போது மாஸ்டர் படம் உலக அளவில் சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

இதில் திரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸும் இதில் இடம்பெற்றுள்ளது.

2021 (இதுவரை) பிரபலமான திரைப்படங்கள்/வெப் சீரிஸ் முழு பட்டியல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here