விஜய்யின் விலையுயர்ந்த சொகுசு கார் வழக்கு… அபாரதத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நிதிமன்றம்!!!

0

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். சமீபத்தில் அவருக்கு  ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் விவகாரம் தொடர்பாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த அபராத விதிப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்து உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் அவர்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து  2012 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ்  காருக்கான நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த  தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு, விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.மேலும் திரைப்பட  ஹீரோக்கள் நிஜத்திலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்பது போன்ற பல விமர்சனங்களையும் கூறினார்.

இந்நிலையில் இதையடுத்து விஜய் தரப்பு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது  விஜய் தரப்பு வழக்கறிஞர் விஜய நாராயணன், நடிகர் விஜய் மீது சித்தரிக்கப்பட்ட கருத்துக்களை நீக்க வேண்டும் எனவும், வணிக துறையினரின் விதிக்கும் வரியை செலுத்த தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் கூறி  தங்களின் வாதத்தை முன் வைத்தார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் அவரின் இந்த சொகுசு கார் விவாகரத்திற்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இன்னும் ஒரு வார காலகட்டத்திற்குள் மீதி உள்ள 80 சதவீத வரியை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here