“லியோ” திரைப்படம் படைத்த அடுத்த சாதனை.., என்னனு தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

0
"லியோ" திரைப்படம் படைத்த அடுத்த சாதனை.., என்னனு தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தளபதி பிறந்த நாள் அன்று நா ரெடி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சோசியல் மீடியா தவிர எந்த விசேஷ வீட்டிலும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் நா ரெடி பாடல் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தளபதி குரலில் வெளியான “நா ரெடி” பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here