பூரிக்கு தொட்டுக்க இனி கடலை பருப்பு குருமா தான்., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

0
பூரிக்கு தொட்டுக்க இனி கடலை பருப்பு குருமா தான்., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
பூரிக்கு தொட்டுக்க இனி கடலை பருப்பு குருமா தான்., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

இதுவரை சாம்பார் அல்லது பொரியல் போன்ற ரெசிபிகளை சமைப்பதற்கு தான் கடலை பருப்பை பயன்படுத்தி இருப்போம். ஆனால் தற்போது இந்த் கடலை பருப்பை வைத்து சுவையான குருமா ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இதை சுட சுட சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்;

 • கடலை பருப்பு – 150 கிராம்
 • தக்காளி – 2
 • பச்சை மிளகாய் – 2
 • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
 • தனியா தூள் – 1/2 டீஸ்பூன்
 • கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – 3 டீஸ்பூன்
 • பட்டை ஏலக்காய், கிராம், பிரியாணி இலை, சோம்பு – சிறிதளவு
 • பெரிய வெங்காயம் – 1
 • இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
 • தேங்காய் – அரை மூடி
 • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்;

இந்த ரெசிபி செய்வதற்கு 150 கிராம் கடலைப் பருப்பை கழுவி ஊற வைத்துக் கொள்ளவும் . இதுபோக அரை மூடி தேங்காயை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். இதன்பிறகு குக்கரை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். இதோடு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சிறிதளவு சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

மேலும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் 2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி விடவும். பின்னர் அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். மேலும் அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் தனியா தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பின்னர் கடலைப்பருப்பு ஊற வைத்திருந்த தண்ணீரை தனியாக வடிகட்டி இதில் சேர்த்துக் ஒரு பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பேஸ்ட் மற்றும் கடலைப் பருப்பை இதில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது குக்கரை மூடி போட்டு மூடி ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும். அதன் பின்னர் கடலைப்பருப்பு குருமாவில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை கிள்ளி போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு சுவையான கடலை பருப்பு குருமா ரெசிபி ரெடி. இதை சுட சுட சப்பாத்தி, பூரி. இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ஐயோ..,நம்ம கவர்ச்சி நாயகி சன்னி லியோனா இது.., கேரளத்து பைங்கிளியாக சும்மா கலக்குறாங்களே – போட்டோ வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here