ஊரடங்கால் பலமடங்கு உயர்ந்துள்ள காய்கறி விலை !!!

0

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து வசதி இல்லாததாலும் தொடர் மழை இல்லாததாலும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

உயர்ந்துள்ள காய்கறி விலை :

சின்னமனூர் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மற்றும் நிலத்தடி நீர்பாசனத்தின் மூலம் நெல் முதல் செங்கரும்பு, ஆலை கரும்பு, திராட்சை, வாழை, காய்கறிகள் என தொடர் சாகுபடி நடக்கிறது. இதன் சுற்றுப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அனைத்தும் ஏலச்சந்தைக்கு விற்பனைக்கு வரும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாா ஏலச்சந்தை மூடப்பட்டுள்ளது. தற்போது குறிப்பிட்ட நேரம் மட்டுமே வியாபாரம் செய்யமுடியும் என்பதால் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படுகின்ற காய்கறிகளை ரோட்டோரங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

 

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொருட்களின் வரத்து குறைவாலும் அதிகப்படியான தேவைகளினாலும் தற்போது காய்கறிகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகள் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here