யங் வாரியர் இயக்கம்..! இளைஞர்களுக்கு அழைப்பு – இப்போதே பதிவு பண்ணுங்க!!!

0

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) கோவிட்-19 ஐ எதிர்த்து போராட இளைஞர்களை  யங் வாரியர் இயக்கத்தில் (Young Warrior Movement) பங்கேற்க அழைத்துள்ளது. 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த இயக்கத்தில் சேரலாம்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எளிதான மற்றும் அத்தியாவசிய பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்த இந்த இயக்கம் முயற்சிக்கிறது. இந்த இயக்கத்தில் இணைவதன் மூலம் இளைஞர்கள் பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உடல்நலன் மற்றும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்க உதவி செய்வது மேலும்,தடுப்பூசி செலுத்த பதிவு செய்தல், மற்றும் தடுப்பூசி பற்றிய தவறான புரிதலை மக்களிடம் இருந்து அகற்றுதல் போன்ற செயல்களை செய்ய ஊக்குவிக்கப்டுகின்றனர்.

இந்த யங் வாரியர் இயக்கம், COVID-19 க்கு எதிராக போராட 50 மில்லியன் இளைஞர்களை ஈடுபடுத்தும் நாடு தழுவிய இயக்கமாக செயல்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.ஆர்வமுள்ள வேட்பாளர்கள் வாட்ஸ்அப்பில் YWA  என்று டைப் செய்து இந்த எண்ணிற்கு  +91 9650414141 அனுப்ப வேண்டும் அல்லது 08066019225 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தும்  பதிவு செய்யலாம்.

இயக்கத்தில் சேர்ந்த வேட்பாளர்களுக்கு இறுதியாக யுனிசெஃப் சான்றிதழ் வழங்கப்படும். கொரோனா தொற்று அதிகம் உள்ள இந்தியாவில் இது போன்ற முயற்சிகள் எடுக்க இளைஞர்களை ஊக்குவிப்பது பலரின் பாராட்டுதலை பெற்றுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here