கிராமத்தை காக்கும் சூப்பர் மேனாக ஆதி….., வெளியானது ‘வீரன்’ படத்தின் ட்ரைலர்….,

0
கிராமத்தை காக்கும் சூப்பர் மேனாக ஆதி....., வெளியானது 'வீரன்' படத்தின் ட்ரைலர்....,
கிராமத்தை காக்கும் சூப்பர் மேனாக ஆதி....., வெளியானது 'வீரன்' படத்தின் ட்ரைலர்....,

இயக்குனர் ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீரன்’. இந்த திரைப்படத்தில் நடிகை அதிரா ராஜ், வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

அந்த வகையில், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் ஆதி இந்த படத்துடன் மூன்றாவது முறையாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் உடன் இணைந்துள்ளார். வரும் ஜூன் 2 ஆம் தேதி ‘வீரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘வீரன்’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு…., வெற்றி யாருக்கு?

ஒரு கிராமத்தில் லேசர் பவர் டெக்னாலஜி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனைத் தடுக்க சூப்பர் மேன் வேடத்தில் வரும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை தான் ‘வீரன்’. வழக்கம் போல காமெடி கலந்த கதையம்சத்துடன் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here