ஜூன் இறுதிக்குள் தயாராகும் ‘லியோ’….,படக்குழு தகவல்….,

0
ஜூன் இறுதிக்குள் தயாராகும் 'லியோ'....,படக்குழு தகவல்....,
ஜூன் இறுதிக்குள் தயாராகும் 'லியோ'....,படக்குழு தகவல்....,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, ப்ரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஸ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நடந்து வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காஸ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த ‘லியோ’ படப்பிடிப்பு தற்போது சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பனையூரில் நடந்து வரும் படப்பிடிப்பில் நடிகர் விஜய், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டு வருகின்றனர்.

கிராமத்தை காக்கும் சூப்பர் மேனாக ஆதி….., வெளியானது ‘வீரன்’ படத்தின் ட்ரைலர்….,

இந்நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் ‘லியோ’ படப்பிடிப்பு முடிவுக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியன்று ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளுக்கு வரும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here