நாங்க பிரிஞ்சிட்டோம் தான்., ஆனால் அவர் தான் ஜோவிகா அப்பா., வேறு வழியின்றி உண்மையை உடைத்த வனிதா!!

0
நாங்க பிரிஞ்சிட்டோம் தான்., ஆனால் அவர் தான் ஜோவிகா அப்பா., வேறு வழியின்றி உண்மையை உடைத்த வனிதா!!
நாங்க பிரிஞ்சிட்டோம் தான்., ஆனால் அவர் தான் ஜோவிகா அப்பா., வேறு வழியின்றி உண்மையை உடைத்த வனிதா!!

தென்னிந்திய திரையில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படி இருக்கையில் இந்த பிக் பாஸ் சீசன் 7ல் வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் கண்டெஸ்டண்டாக களமிறங்கியுள்ளார். மேலும் கடந்த வாரம் ஜோவிகாவுக்கும், விசித்திராவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. அதில் பலர் ஜோவிகாவிற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் ஜோவிகா தனது பெயருக்கு பின் அவரது தாத்தா பெயரை பயன்படுத்தி வருவது குறித்தும் அவரது தந்தை யார் என பல கேள்விகளை முன் வைத்து வந்தனர். இதற்கு பதிலளித்த வனிதா கூறியதாவது, பாலிவுட்டில் சல்மான் கான், கரீனா கபூர், அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களின் குடும்ப பெயர்களை பயன்படுத்துவது உங்களுக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் வனிதாவின் மகள் பயன்படுத்தினால் தவறா? மேலும் ஜோவிகாவை நான் கர்ப்பமாக இருக்கும் போதே நாங்கள் பிரிந்துவிட்டோம். அதனால் தான் என்னுடைய அப்பா பெயரை அவர் பயன்படுத்திக் கொள்கிறார். இதோடு அவரது அப்பா நடிகர் ஆகாஷ் தான் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here