இத்தனை நாட்கள் என் நினைவுகளை வாழ வைத்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி – நடிகர் வடிவேலு!!

0

தமிழ் திரையுலகில் உச்சகட்ட காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் வடிவேலு. தற்போது அவருக்கு பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு முக்கிய விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.

வைகை புயல் வடிவேலு

தனது சிறு வயதிலேயே திரையுலகில் கால் எடுத்து வைத்த வடிவேலு ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். என் ராசாவின் மனசில் தான் அவரது முதல் படமே. அடுத்தடுத்து அவரது ரியாக்சன், அனைத்துமே மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்தது.

இப்பொழுது ஒரு காமெடி சொல்ல வேண்டும் என்றால் அது வடிவேலு டயலாக் தான் இருக்கும். அந்த அளவிற்கு பிரபலமானார். இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் 2 ஆம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் ரெட் கார்டு போடப்பட்டது.

தற்போது அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த நிலையில் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இப்படி இருக்க இத்தனை நாட்கள் தான் சினிமா துறையில் இல்லை என்றாலும் தனக்கு மக்கள் அவர்கள் வீட்டிலேயே அங்கீகாரம் கொடுத்திருந்தனர். அதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் சினிமாவில் முதலில் இருந்து வாய்ப்பு தேடுவது போன்ற ஒரு உணர்வு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இத்தனை நாள் தன் நினைவுகளை வாழ வைத்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தனது நன்றியை கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here