உடைச்சு பிச்சு போட்ட நண்டு கிரேவி… ஒரு தடவ செஞ்சு பாருங்க மிச்சமே இருக்காது!!!

0

கடல் உணவுகள் எப்பொழுதும் சுவையான ஒன்று. இதில் முக்கிய பங்கு வகிப்பதில் ஒன்று நண்டு. இது பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும் அதில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன. மேலும் சளியை விரட்ட நண்டை வைத்து ரசம், கிரேவி என எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் பயன் அளிக்கும். இத்தனை பலன்களை தரக்கூடிய இந்த நண்டை மாதத்திற்கு ஒரு முறையாவது நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்நிலையில் இந்த பதிவில் உடைச்சு பிச்சு போட்ட நண்டு கிரேவி எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

தேவையான பொருட்கள்

நண்டு – 1 கிலோ

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா  – 1/4 தேக்கரண்டி

மல்லி தூள் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி

புதினா – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

கருவேப்பில்லை  -சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் நன்கு சுத்தம் செய்த நண்டை இட்லி கொப்பரையில் வைத்து வேக வைத்து கொள்ளவும். அதன் பின்னர் அதன் ஓட்டை உடைத்து அதிலிருந்து அதன் சதை பகுதியை எடுத்துக் கொள்ளவும். இந்நிலையில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி கொள்ள வேண்டும். மேலும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.

அதன் பச்சை வாடை போக சிம்மில் வைத்து வதக்கி கொள்ளவும். அதன் பின்னர் தண்ணீர் தெளித்து கொண்டு உப்பு சேர்த்து கிரேவி பதத்திற்கு வரும் வரை வதக்கி கொள்ளவும். இதனையடுத்து நாம் எடுத்து வைத்து உள்ள நண்டின் சதை பகுதியை சேர்த்து கொள்ளவும்.

அதன் பின்னர் மசாலா மற்றும் நண்டு ஒன்றோடு ஒன்று சேரும்படி வேக வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி கொள்ள வேண்டும். தற்போது சுவையான சூப்பரான உடைச்சு பிச்சு போட்ட நண்டு கிரேவி ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here