அமெரிக்க ஓபன் டென்னிஸ் – தோல்வியுடன் வெளியேறிய நட்சத்திர வீரர்!

0
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - தோல்வியுடன் வெளியேறிய நட்சத்திர வீரர்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - தோல்வியுடன் வெளியேறிய நட்சத்திர வீரர்!

பல கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலை வீழ்த்தியதன் மூலம் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோயா காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி ரஷ்ய வீரரை எதிர்கொள்ள உள்ளார்.

நடால் தோல்வி!

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தொடர் வெற்றியை சந்தித்து வந்த நடால் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று விடுவோம் என நடால் ஆட்டத்தில் கொஞ்சம் கவனமின்றி விளையாடத் தொடங்கினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை பயன்ப்படுத்தி கொண்ட அமெரிக்க வீரர் 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் நடால் இந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் தோல்வியை சந்தித்துள்ளார். இதில் வெற்றி பெற்ற பிரான்சிஸ் டியாபோ காலிறுதி ஆட்டத்தில் ஆந்த்ரே ரூப்லெவ்வுடன் மோத உள்ளார்.

இதே போன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீரரான ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடி ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here