அமெரிக்க ஓபன் டென்னிஸ் – அசத்தலாக முன்னேறும் நட்சத்திர வீரர்கள்!

0
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - அசத்தலாக முன்னேறும் நட்சத்திர வீரர்கள்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - அசத்தலாக முன்னேறும் நட்சத்திர வீரர்கள்!

யுஎஸ் ஓபன் போட்டியின் நான்காம் சுற்றுக்கு ஜாம்பவான் ரபேல் நடால், ஆன்ட்ரெ ருப்லேவ், உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக், பெட்ரா குவிட்டோவா, ஜெஸிக்கா பெகுலா உள்ளிட்டோா் சிறப்பாக விளையாடி முன்னேறி உள்ளனா்.

காலிறுதிக்கு முன்னேற்றம்..!

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் கேஸ்பர் ரூட், பிரான்ஸ் வீரர் கோரெண்டின் மவுடெட் உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடி கேஸ்பர் ரூட் 6-1, 6-2, 6-7 (4-7), (6-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதே போன்று மற்றொரு ஆட்டத்தில் ஆன்ட்ரெ ருப்லேவ் 6-4, 2-6, 7-6, 6-4, 7-6 என 5 செட்களில் கடும் போராட்டத்துக்கு பின் டெனிஸ் ஷபவலோவோ வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். நான்காம் சுற்றில் கேமரன் நாா்ரியை எதிர்கொள்கிறார். இதனை தொடர்ந்து ஸ்பெயின் இளம் வீரா் காா்லோஸ் அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என நோ்செட்களில் ஜென்ஸன் புருக்ஸ்பையை வீழ்த்தி நான்காம் சுற்றில் மரின் சிலிச்சை சந்திக்கிறாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா 6-2, 6-7, 6-0 என சீனாவின் யுவான் யுயிை வீழ்த்தினார். இதே போன்று பெட்ரா குவிட்டோவா 5-7, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி முகுருஸாவை வீழ்த்தினார். உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என அமெரிக்காவின் லாரன் டேவிஸை அசத்தலாக வீழ்த்தி இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here