நடிகர் ராஜ்கிரணுக்கு எவ்ளோ நல்ல மனசு., 1.50 கோடி இல்ல, எவ்ளோ கொடுத்தாலும் நடிக்க முடியாது!!

0
நடிகர் ராஜ்கிரணுக்கு எவ்ளோ நல்ல மனசு., 1.50 கோடி இல்ல, எவ்ளோ கொடுத்தாலும் நடிக்க முடியாது!!

தமிழ் சினிமாவின் முன்னணி பாரம்பரிய நடிகரான, ராஜ்கிரண் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ராஜ்கிரண் மறுப்பு:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமாக திகழ்ந்து வருபவர் ராஜ்கிரண். கிராமத்து படமான ராசாவின் மனசிலே தொடங்கி அரண்மனைக்கிளி, முனி, காவலன், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக அசத்தியுள்ளார். இவரது, படங்களில் எல்லாம் தமிழரின் பாரம்பரியமான வேட்டி, சட்டை அணிந்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதை பார்த்த பிரபல வேட்டி நிறுவனம், இவரை தனது விளம்பரத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் பேசியது. 50 லட்சத்தில் ஆரம்பித்த சம்பளம் கிட்டத்தட்ட 1.50 கோடி வரை போனது. ஆனால் நடிகர் ராஜ்கிரண் இதில் நடிக்க முடியாதென மறுத்து விட்டார். மேலும், இதற்காக அவர் தெரிவித்த காரணம் என்னவெனில் வேட்டி என்பது ஏழைகள் உடுத்தும் உடை என்றும், அதை 100 ரூபாய்க்கு மேல் வாங்கவே அவர்கள் சிரமப்படுவார்கள்.

மேலும், இந்த விளம்பரத்தில் எனக்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுத்தால், அந்தத் தொகையையும் நீங்கள் இந்த வேட்டியை வாங்குபவரிடம் தான் வசூலிப்பீர்கள் எனக் கூறி இதில் நடிக்க மறுத்து விட்டார். இந்த செய்தியை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், இந்த மனுஷனுக்கு இவ்ளோ நல்ல மனசு பா என  கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here