விராட் கோலி, தோனிக்கு இடையே இப்படி ஒரு உறவா – பல வருடங்கள் கழித்து வெளிவந்த ரகசியம்!

0
விராட் கோலி, தோனிக்கு இடையே இப்படி ஒரு உறவா - பல வருடங்கள் கழித்து வெளிவந்த ரகசியம்!
விராட் கோலி, தோனிக்கு இடையே இப்படி ஒரு உறவா - பல வருடங்கள் கழித்து வெளிவந்த ரகசியம்!

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி செய்தியாளர்களிடம் தோனி பற்றி சில உண்மைகளை பகிர்ந்து உள்ளார்.

விராட் கோலி பகிர்ந்த உண்மைகள்!

இந்தியா தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்த போதிலும் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. மேலும் இந்த ஆட்டத்தில் நீண்ட நாள் மோசமான ஃபார்மில் விளையாடி வந்த விராட் கோலி நேத்து ஃபார்முக்கு திரும்பி உள்ளார். இந்த போட்டியில் 44 பந்துகளை எதிர்கொண்ட நட்சத்திர பேட்ஸ்மேன் 60 ரன்கள் குறித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வதற்கு மிகப்பெரிய முக்கிய பங்காக இருந்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் இந்த சூப்பர் 4 ஆட்டம் முடிவடைந்த பிறகு நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்ததில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது விராட் டெஸ்ட் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது எம் எஸ் தோனி மட்டுமே அவரை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் என்னுடைய நம்பர் அனைவரிடமும் இருந்த போதும் யாரும் என் மேல் அக்கறை எடுத்து பேசவில்லை. ஆனால் நோனி என்னிடம் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது மட்டுமல்லாமல் அவரும் நானும் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி எங்களது ஒற்றுமையை நிரூபித்துள்ளோம். தற்போது வரை எனக்கு போட்டியில் எந்த ஒரு சந்தேகம் ஏற்பட்டாலும் தோனியிடம் தான் கேட்பதாக மகிழ்ச்சியுடன் விராட் கோலி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here