போட்டியில் நடாலுக்கு ஏற்பட்ட பலத்த காயம் – பல போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி!

0
போட்டியில் நடாலுக்கு ஏற்பட்ட பலத்த காயம் - பல போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி!
போட்டியில் நடாலுக்கு ஏற்பட்ட பலத்த காயம் - பல போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடால் பல சிக்கலை தாண்டி இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினியை வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

காயத்தை முறியடித்த நடால்!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினியை, 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரஃபேல் நடால் எதிர்கொண்டார். இதில் இருவருக்கும் இடையிலான கடுமையான ஆட்டத்தில், பல சவால்களையும் தாண்டி ரஃபேல் 2-6, 6-4, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலிய ஃபேபியோ ஃபோக்னினியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் நடால் இந்த போட்டியில் விளையாடி கொண்டிருக்கும் போது பல சிக்கலான சூழ்நிலைகளை கடந்துள்ளார். அதாவது ஆட்டத்தின் நான்காவது செட்டில், நடால் தனது மூக்கை அவரே தெரியாமல் தாக்கி கொண்டார். இதனால் அவரது மூக்கில் ரத்தம் நிற்காமல் வர தொடங்கியது. இந்த சூழ்நிலையில் பயிற்சியாளர் ஒருவர், அவரது மூக்கில் கட்டு போட்டதால் ரத்தம் நின்றது. இதனால் ஆட்டம் சற்று நேரம் தாமதமானது. இதன் பிறகு ஆட்டத்தில் நடால் கவனம் செலுத்தி வெற்றி பெற்றது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here