கோபியின் நாடகத்தில் கவுந்த ராதிகாவின் குடும்பம்.., பாக்கியாவை கொச்சைப்படுத்தும் இனியா.., சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விஜய் தொலைக்காட்சியின் ப்ரைம் டைம் தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் புது புது திருப்பங்கள் வந்த மையமாக இருப்பதால் பார்வையாளர்களும் கூடி கொண்டே தான் இருக்கிறார்கள். கோபியின் பரிதாப நிலையை பற்றி அம்மாவிடமும், அண்ணனிடமும் பேசி கொண்டிருப்பதோடு முடிவடைந்த நேற்றைய எபிசோட்டின் தொடர்ச்சியாக இன்று இனி ராதிகா போக்குல நாம போனா அவ கடைசி வர இப்படித்தான் பேசிகிட்டு இருப்பா. அதுனால இந்த விஷயத்துல நாமளே நல்ல முடிவு எடுத்துருவோம்னு பேசி கொள்கிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் படியே, கோபியை சந்திக்க ராதிகாவின் அண்ணனும் செல்கிறார். அங்கு ராதிகா பேச்சை ஆரம்பித்தவுடனே கோபியும் புலம்ப தொடங்குகிறார். அதாவது, நான் ராதிகாவுக்காக தான் டைவர்ஸ் வங்கினே, வீட்டை விட்டு வெளியே வந்து இப்போ எதோ அனாதை மாதிரி ரூம் எடுத்து தங்கி ஹோட்டல்ல சாப்பிட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். ஆனா இத எதையும் ராதிகா புரிஞ்சிக்கல அப்டினு சொல்லி வருத்தப்படுகிறார். உடனே ராதிகாவின் அண்ணன் நானும் அம்மாவும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிருக்கோம்.

நீங்க ஒதுக்குவீங்களா? என கேட்க, ராதிகா இப்போ ஓகே சொன்னா கூட நாளைக்கே கல்யாணத்த வச்சிக்கலாம் என கூறுகிறார் கோபி. உடனே அவரும் எப்படியோ நான் வந்த வேல சுலபமா முடிஞ்சது. சீக்கிரம் எல்லாமே நல்லதா நடக்கும்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இந்த பக்கம் பாக்கியா ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ அப்டிங்குற பழமொழிக்கு ஏத்த மாதிரி மனசுக்குள்ள கோபியை நினைத்து வாடுகிறார். மாரு நாள் காலையில் இனியவை சாப்பிட சொன்ன பாக்கியாவை இனியா கண்டபடி பேசுகிறார்.

எங்க அப்பா என் கூட இருந்தப்போ கார்ல ஸ்கூல் போவேன் அவ்ளோ ஹாப்பியா இருக்கும் ஆனா எல்லாமே உன்னால மாறிப்போச்சு. இல்லத்துக்கு நீதான் காரணம்னு சொல்ல, ஒரு கட்டத்தில் கோபத்தை அடக்கமுடியாத ஏழில் ஏன் நீ கார்ல ஸ்கூல் போனாதான் அங்க உள்ள விடுவாங்களானு அதட்டு போடுகிறார். உடனே ஈஸ்வரி இனியாவுக்கு சப்போர்ட் செய்து வழக்கம் போல பாக்கியாவை அசிங்கப்படுத்தினார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here