யுபிஎஸ்சி 2020 தேர்வுக்கால அட்டவணை வெளியீடு – முழு விபரங்கள் இதோ!!

0
upsc-civil-service
upsc-civil-service

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு(2021) நடைபெற உள்ள தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் நடைபெறும் நாள் போன்ற சில விபரங்களை வெளியிட்டுள்ளது.

யுபிஎஸ்சி

யுபிஎஸ்சி, தேர்வுக்கான கால அட்டவணையை www.upsc.gov.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 23 தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, போட்டி தேர்வுக்கான அறிவிப்பு எப்போது அறிவிக்கப்படும், எழுத்து தேர்வு நாள் போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

UPSC
UPSC

இதில் பிப்ரவரி 21 இல் ஒருங்கிணைந்த ஜியோ சயின்டிஸ்ட்(முதல்நிலை தேர்வு) தேர்வும், மார்ச் 14 இல் சிஐஎஸ்எப் உதவி கமாண்டன்ட் (நிர்வாகம்) தேர்வும் நடக்கவுள்ளது. மேலும் ஜூன் 27 இல் சிவில் சர்வீஸ்(ஐஏஎஸ், ஐ.பிஎஸ் உள்ளிட்ட பணிகள்) முதல்நிலை தேர்வு மற்றும் இந்திய வனப்பணி அதிகாரி(ஐஎப்எஸ்) முதல்நிலை தேர்வுகள் நடக்கும். அதனை தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வு, ஐஎப்எஸ் போன்ற காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 10 இல் அறிவிக்கப்படும். இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 2.

இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா ராஜினாமா!!

upsc
upsc

அதனை தொடர்ந்து செப்டம்பர் 17 இல் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நடக்கிறது. நவம்பர் 21 இல் இந்திய வனப்பணி அதிகாரிக்கான மெயின் தேர்வும் நடக்கிறது. ஆகஸ்ட் 8 இல் மத்திய போலீஸ் படை உதவி கமாண்டன்ட் தேர்வும், ஆகஸ்ட் 29 இல் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு நடைபெற உள்ளது. ஜூலை 18 இல் இன்ஜினியரிங் சர்வீஸ் (முதல்நிலை) தேர்வும், மெயின் தேர்வு அக்டோபர் 10 இல் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here