ஏப்ரல் 15ல் கொடியேற்றத்துடன் துவக்கம் – இந்த ஆண்டு களைகட்டுமா மதுரை சித்திரை திருவிழா??

0

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழாவை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சித்திரை திருவிழா:

கூடல் மாநகரம் மதுரையின் மிக முக்கியமான அடையாளம் சித்திரை திருவிழா. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழாவை காண மதுரையை சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் கூட மக்கள் வருவார்கள். கொடியேற்றத்துடன் தொடங்கி தெடர்ந்து இரண்டு வார காலம் நடைபெறும் இந்த திருவிழாவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும், பிரயாவிடையும் இன்னபிற தெய்வங்களும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வாக மீனாட்சி – சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணமும் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவமும் நடைபெறும். சைவ-வைஷ்ணவ சமமயங்களை இணைக்கும் நிகழ்வாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

புதிய தொழிற்கொள்கை – தமிழக முதல்வர் இன்று வெளியீடு!!

இத்தனை சிறப்புகள் வாய்ந்த சித்திரை திருவிழா, கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. சென்ற முறை, கோவிலுக்குள் சில அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க மிக எளிமையாக நடந்த்து முடிந்த இந்த திருவிழா இம்முறை விமரிசையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவிழா காலங்களில் உற்சவர்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மக்களை ஆசீர்வதிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here