கலை & அறிவியல் படிப்பிற்கும் நுழைவுத்தேர்வு நடத்த யுஜிசி.,க்கு பரிந்துரை – மாணவர்கள் கொந்தளிப்பு..!

0
Exam
Exam

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு, பொறியியல் துறைகளில் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பார்வை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பக்கம் திரும்பி உள்ளது. பிரபலமான கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்க முன்னாள் துணைவேந்தர் குழு யுஜிசி.,க்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

குறைந்த செலவு, நிறைய பயன்கள்:

ஒரு காலகட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் மட்டும் தான் படிப்பர் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. அது தற்போது முற்றிலும் மாறி உள்ளது. இன்ஜினியரிங் அல்லது மருத்துவம் போன்ற படிப்புகளில் மாணவர்களுக்கு அந்தந்த துறைகளில் மட்டும் தான் வேலைவாய்ப்புகள் இருக்கும்.

ஆனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. இதில் எளிய சேர்க்கை, கல்வி கட்டணம் மற்றும் 3 ஆண்டுகளில் பட்டம் என பல்வேறு நன்மைகள் உள்ளன. இதனால் மாணவர்களின் கவனம் முழுக்க இந்த படிப்புகள் மீது திரும்பி உள்ளது.

கலந்தாய்வு முறை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு முறை பின்பற்றப்படாமல் நேரடியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களும் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மாணவர்களுக்கு பிடித்த கல்லூரியில், அவர்கள் ஆசைப்படும் படிப்பில் இடம் கிடைப்பதில்லை. எனவே பொறியியல் & மருத்துவப் படிப்புகளை போன்று இதற்கும் ஆன்லைன் கவுன்சிலிங் முறையில் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்த முறை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கலை, அறிவியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்த யுஜிசிக்கு அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தேர்வு நேரத்தை 3 மணிநேரத்தில் இருந்து 2 மணிநேரமாக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து மத்திய அரசு முடிவை அறிவிக்கும் என கூறப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here