கலை&அறிவியல் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத்தேர்வு – செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம்..! யுஜிசி வழங்கிய பரிந்துரைகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு பெரிதளவு பாதிக்கப்பட்டு உளள்து. இதனால் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தேர்வுகள் இன்னும் நடைபெறாத நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளது. எனவே இது குறித்து ஆராய பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் ஹரியானா மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையில் 12 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தற்போது மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.

பரிந்துரைகளின் விபரம்:

யுஜிசி மானியக்குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பணியாளர்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,

தேர்வு பரிந்துரைகள்:

  • கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு வழங்கிய பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்ட வரைவு ஆகியவற்றை உறுதி செய்து, ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும்.
  • ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்ட விடுமுறைகளையும் மாணவர்களின் வருகைப்பதிவேட்டில் அவர்கள் கல்லூரிக்கு வந்ததாக கருத்தில் கொண்டு தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும்.
  • ஊரடங்கிற்கு பிறகு நடத்தப்படும் தேர்வுகளில் மதிப்பெண்கள் மாற்றம் செய்தும், தேர்வு நேரத்தை 3 மணிநேரத்தில் இருந்து 2 ஆக குறைத்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
  • தேர்வுகளை ஆன்லைன் மூலம் அல்லது வாய்ப்பு உள்ள பகுதிகளில் OMR முறையிலும் நடத்தலாம்.
  • ஒரு மதிப்பெண் அடிப்படையில் தேர்வுகளை நடத்தலாம்.

வழிமுறைகள் விபரம்:

  • செமஸ்டர் தேர்வினை ஜூலை மாதம் நடத்தி முடித்து ஆகஸ்டில் அடுத்த கல்வியாண்டிற்கான பாடங்களை நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
  • வரும் மற்றும் அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் செயல்பட அனுமதி அளிக்கலாம்.
  • இறுதி ஆண்டு தவிர்த்து முதலாம் ஆண்டு மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம்.
  • முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்களில் 50 மதிப்பெண்கள் முந்தைய செமஸ்டரின் அகமதிப்பீட்டின் அடிப்படையிலும், மீதம் உள்ள 50 மதிப்பெண்கள் முந்தைய செமஸ்டர் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கலாம்.

பல்வேறு மாநிலங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடைபெறாமல் இருப்பதால் தேசிய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறலாம் எனவும் யுஜிசி குழு பரிந்துரை செய்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here