டிரம்ப்புக்காக தயாராகும் தாஜ் மஹால் – இந்தியாவில் பள்ளி செல்ல விரும்பும் மெலினா டிரம்ப்..!

0

இந்தியாவிற்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தயாராகும் தாஜ் மஹால்..!

இந்தியா வரும் டிரம்ப் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க உள்ளார். இதற்காக விமான நிலையத்தில் இருந்து தாஜ் மஹால் வரை உள்ள சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. டிரம்ப்பின் அதீத பாதுகாப்பு அம்சம் கொண்ட காரினை (The Beast Car) தாஜ் மஹால் அருகில் (500 மீட்டருக்குள்) கொண்டு செல்ல அனுமதி தரப்படவில்லை. இதனால் அவர் வேறு வாகனத்தின் உதவியுடன் சுற்றிப் பார்க்க உள்ளார்.

டிரம்ப்பிற்கு சிலை வைத்து வழிபடும் இந்தியர் – டிரம்ப் கிருஷ்ணா!!

இந்தியாவின் குஜராத்தில் கட்டுப்பட்டு உள்ள உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தையும் டிரம்ப் திறந்து வைக்க உள்ளார். இதற்காக வரும் வழிகளில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைத்து சுவர் கட்டும் பணிகள், ஓவியம் வரைதல் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. அதன் பிறகு ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற கலைநிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளார்.

டிரம்ப் வருகையால் குடிசை வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி – இன்னும் என்னென்ன நடக்குமோ..?

பள்ளி செல்ல ஆசை..!

டிரம்ப் உடன் இந்திய வரும் அவரது மனைவி மெலினா டிரம்ப் டெல்லியில் உள்ள பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் உரையாடி தனது பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்க விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே இதற்கான ஏற்பாடுகளும் கூடிய விரைவில் நடைபெற உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here