தமிழக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் உள்ள சிறு, குறு நடுத்தர விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுக்கின்றனர். அதில் ஒன்று இலவச மின்சார திட்டம். இந்த இலவச மின்சார திட்டம் கடந்த , 2023 – 24ம் நிதியாண்டில், 50,000 இலவச மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை, 20,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது, கடந்த ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் சேதமடைந்த பணிகளை சரிசெய்ததால் விவசாயிகளுக்கு போதிய அளவு மின் இணைப்பு வழங்க முடியவில்லை. எனவே அடுத்த இரு மாதங்களில் மின் இணைப்புகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here