தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்க அந்தந்த கல்வி நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கும் பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் இப்போது மருந்தியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை இடம் இந்திய மருந்தியல் ஆசிரியர் சங்கம் அனுமதி கோர உள்ளது.

அதற்கான காரணம் என்னவென்றால் பல ஆசிரியர்கள் முதுநிலை படிப்பை முடித்தவுடன் பணியில் சேர்ந்து விடுகின்றன. அவர்களுக்கு பாடம் நடத்துவது பற்றி போதிய அனுபவம் இல்லாததால் மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்ளும்படி தெளிவாக பாடம் நடத்துவதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் மிகவும் பாதிப்படைகின்றனர். இதன் காரணமாக தான் இப்போது மருந்தியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும்? பரந்த கோரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here