இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா.., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா.., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!
இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா.., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம்: 

பயணிகளின் வசதி, பாதுகாப்பிற்கு ஏற்ப பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. என்ன தான் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் முறைக்கேடுகள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் புது டெல்லியில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியது. இதனால் இது போன்ற சம்பவங்கள் இனி அரங்கேறாமல் இருக்க புது டெல்லியில் ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இனி வரும் நாட்களில் டிக்கெட் பரிசோதகர் உடலில்  கேமரா பொருத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதன் முதல் மத்திய ரயில்வேயின் இத்திட்டத்தின் வரவேற்பை பொறுத்தே நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளனர்.

தமிழகத்தில் நாளை நீட் தேர்வு – 1.50 லட்சம் மாணவ,  மாணவியர்கள் பங்கேற்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

இத்திட்டத்திற்காக 50 பாடி கேமராக்கள் வாங்கி மும்பையில் கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு கேமராவின் விலை 9 ஆயிரம் ரூபாய் என்றும், 20 மணி நேரத்திற்கான காட்சிகளை பதிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here