தமிழகத்தில் நாளை நீட் தேர்வு – 1.50 லட்சம் மாணவ,  மாணவியர்கள் பங்கேற்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் நாளை நீட் தேர்வு - 1.50 லட்சம் மாணவ,  மாணவியர்கள் பங்கேற்பு - மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை நீட் தேர்வு - 1.50 லட்சம் மாணவ,  மாணவியர்கள் பங்கேற்பு - மத்திய அரசு அறிவிப்பு!!
மத்திய அரசு சார்பாக மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடைபெற இருக்கும்  நிலையில் Hall Ticket வெளியிடப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வு எழுதுபவர்கள் அதற்குரிய இணையதளத்திற்கு சென்று தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும்  அந்த ஹால் டிக்கெட்டில் தேர்வு எழுதும்  மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே மாணவ மாணவிகள் வர வேண்டும். இந்த தேர்விலும் வழக்கம் போல பல கெடுபிடிகள் இருக்கும்.
இந்நிலையில் இந்த நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.அதுமட்டுமின்றி தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here