டாஸ்மாக்கை நம்பி திமுக அரசு செயல்படுகிறதா?? அதிர்ச்சியளிக்கும் தகவல் உள்ளே!!

0
டாஸ்மாக்கை நம்பி திமுக அரசு செயல்படுகிறதா?? அதிர்ச்சியளிக்கும் தகவல் உள்ளே!!
டாஸ்மாக்கை நம்பி திமுக அரசு செயல்படுகிறதா?? அதிர்ச்சியளிக்கும் தகவல் உள்ளே!!

தமிழகத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கலில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். அதற்கான பணிகளில் அரசாங்கம் தீவிரம் காட்டி வந்த நிலையில் சென்னை திருமங்கலத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் கடை வருமானத்தில் தான் தமிழக அரசு நடப்பதாக கூறுவது வேதனையளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. அடுத்து மூடப்பட இருக்கும் டாஸ்மாக் கடை கணக்கெடுக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்று கூறினார்.

ரேஷன் தாரர்களுக்கு குட் நியூஸ்.., இனி ‘கியூ ஆர் கோடு’ மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்!! 

இவர் இந்த பேச்சுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டாஸ்மாக் வருமானத்தில் அரசாங்கம் ஓடவில்லை என்றால் உடனே மூட வேண்டியது தானே என்று சிலர் கூறுகின்றனர். அதே போல் அமைச்சர் செந்தில் கூறுவது நடக்க சாத்தியமே இல்லை. மேலும் அரசின் வருமானத்தை பெருக்குவதற்கு கிரானைட், கல் குவாரி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தை அதிகரித்தால் டாஸ்மாக்கை படிப்படியாக மூடலாம் என்று கூறிகின்றனர்.

இதற்கு திமுக தரப்பினர், மது விற்பனை மூலம் கிடைப்பது 10% தான். அதாவது, ரூ.30,000 கோடி அரசாங்கத்திற்கு கிடைக்கிறது. இந்த வருமானத்தை வேறு முறையில் ஈட்டி கொண்டுவந்தால் ஒரு ஆண்டில் டாஸ்மாக்கை முழுவதுமாக மூடி விட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here