டிராய் (TRAI) அமைப்பு புதிய திட்டம் – கேபிள் கட்டணம் குறைகிறதா?

0
டிராய் (TRAI) அமைப்பு புதிய திட்டம் - கேபிள் கட்டணம் 2

டிராய் (TRAI) அமைப்பு கேபிள் டிவி மற்றும் டி.டி.எச் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த மற்றங்கள் கொண்டு வரப்பட்ட உடனே பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகளும், கேள்விகளும் எழுந்தன.  எனவே அவற்றை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராட்காஸ்ட்டர்கள் என இருவருமே மகிழ்ச்சி அடையும் வண்ணம் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

என்னென்ன மாற்றங்கள்??

     1.  என்.சி.எஃப். கட்டணம் ரூ. 130ல் 150 சேனல்களுக்கு பதிலாக தற்போது 200 சேனல்கள் பார்க்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

     2.  ப்ராட்காஸ்டர் சேனல்களுக்கான பேக்குகளில் ரூ. 12க்கு அதிகமான விலையுள்ள சேன்லகளை இணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

     3.  மேலும் நெடுநாள் திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

     இனி ரூ. 160 மட்டுமே செலுத்தி (ஜிஎஸ்டி வரிகள் உட்பட) 200 சேனல்களை வாடிக்கையாளர்கள் கண்டுகளிக்க முடியும்.  மேலும் கூடுதலான சேனல்களைப் பெற தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.  ப்ரோட்காஸ்டர் சேனல்களின் கட்டணங்களை மாற்ற ஏற்கனவே அந்நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்டணம் குறைய வாய்ப்புள்ளதா?

     ஃப்ரீ டூ ஏர் சேனல்களை மட்டும் பார்க்க விரும்பினால் மாதாந்திர பில் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் ப்ரோட்காஸ்டர் பொக்கெட் சேனல்களை பார்க்க விரும்பினால் இப்போது நீங்கள் செலுத்திக் கொண்டிருக்கும் கட்டணங்களைக் காட்டிலும் அதிகமாக பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here